சேலம் மாவட்ட
சமுதாய மறுமலர்ச்சி அமைப்பு
இனிய வணக்கங்கள் !
இன்று (11.5.2014) நம் அமைப்பின் செயற்க்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அம்சங்களைப்பற்றி விவாதங்கள் மேற்க்கொள்ளப்பட்டு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள்:
- தமிழ் வருடத்திற்க்கான நாட்காட்டி வெளியிடுதல்.
- சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கருங்காலி கிராம மக்களுக்கு சாதிச்சான்றிதல் பெற்றுத்தர நடவடிக்கை மேற்க்கொள்ளுதல்.
- நம் அமைப்பைப்பற்றியும், சமுதாய மறுமலர்ச்சியை பற்றியும் இதழ் அல்லது மலர் வெளியிடுதல்.
- இம்மாதத்திற்க்குள் கட்டாயமாக கிழைகள் துவங்குதல்.
- நம் அமைப்பிற்கான ஆதரவாளர்களை திரட்ட ஒவ்வொருவரும் பாடுபடுதல்.
இதுமட்டுமின்றி
நம் தோழர்களால் இணைந்து பாடுபடவும், தொடர்ந்து தொண்டாற்றவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- அவரவர் பகுதியில் அரசியல், பொருளாதார, சமுதாய நிலை பற்றியும், அங்குள்ள பிரைச்சனைகள், அதற்க்கான தீர்வுகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் பற்றியும் விவரம் சேகரிக்குமாறு நம் அமைப்பு தோழர்களிடம் செயலாளரால் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சரித்திரம் படைப்பது நிச்சயம் !
மறுமலர்ச்சி ஏற்ப்படுவது நிச்சயம் !
நம் சமுதாயம் விழிப்பது நிச்சயம் !
நாம்
ஒன்றிணைந்து முயன்றால் !
- வெ.க.சிவா,
செயலாளர்,
சமுதாய மறுமலர்ச்சி அமைப்பு.